அடிமேல் அடிவாங்கும் நெல்சன்.. செம டோஸ் விட்ட சன் பிக்சர்ஸ்

கோலமாவு கோகிலா டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜயின் 65 படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முதலில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் டாக்டர் படத்தில் காமெடியில் கலக்கிய பல நடிகர்களும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, விடிவி கணேஷ் நடித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாகவே சென்னையில் நடக்கும் பீஸ்ட் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தளபதி விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி படக்குழுவினரை செம அப்செட் ஆகி உள்ளது. அதிலும் சட்டையில் ரத்தக்கறையுடன் விஜய் நிற்கும் புகைப்படம் எல்லாம் வேற லெவல் இணையத்தில் வைரலாகியது.

இதனால் படக்குழுவினர் மட்டுமல்லாமல் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்ன நெல்சன் இதெல்லாம் இப்படியெல்லாம் இருந்தால் எப்படி என செம டென்ஷனாகி டோஸ் விட்டு விட்டார்களாம். இப்படியே தினமும் ஒவ்வொரு காட்சியாக வெளியாகி கொண்டிருந்தால் படத்தை நிறுத்தி விட்டு கம்பெனியை மூடி விட்டு செல்ல வேண்டியதுதான் என கடிந்து கொண்டார்கள்.

இதனால் எப்போதுமே ஜாலியாக இருக்கும் நெல்சனின் இப்போது கொஞ்சம் கோபமாக இருப்பதாக தெரிகிறது. படக்குழுவில் செல்போன் தேவையில்லாத கேமரா போன்றவற்றை தவிர்க்க பல்வேறு கட்டளைகள் போடப்பட்டு நிறைய கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறதாம். மேலும் தீபாவளிக்கு பீஸ்ட் படத்தின் சிங்கிள் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது எனவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.