அடக்க நினைத்த லதா ரஜினிகாந்த்.. அடுத்த ரூட்டை பிடித்து கெத்து காட்டும் தனுஷ்

தனுஷ், ஐஸ்வர்யா பிரிவிற்கு பிறகு தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ஏனென்றால் அவரின் மாமியார் லதா ரஜினிகாந்த் தனுஷுக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கக்கூடாது என இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கட்டளையிட்டுள்ளார்.

இதனால் புதிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த தனுஷ், லதா ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற போதும் தனுஷைப் பார்க்க முடியாது என்று சொல்லி வீட்டுவாசலிலேயே தனுஷ் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் இதை எப்படி எதிர்கொள்வது என தனுஷ் யோசித்து நாமே படங்களை இயக்கலாம் என்ற முடிவில் இறங்கியுள்ளார்.

தனுஷ் இதற்கு முன்னதாக ராஜ்கிரண் மற்றும் ரேவதியை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து பலே பாண்டி என்ற படத்தை இயக்கினார். விமர்சன ரீதியாக இப்படம் நல்ல பாராட்டைப் பெற்றது. இதை தொடர்ந்து இவர் சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து மற்றொரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஆனால் சில காரணங்களால் இப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பிறகு தனுஷூம் ஹாலிவுட், பாலிவுட் என பல படங்களில் பிஸியாக இருந்தார். இந்நிலையில் தற்போது தனுஷ் மீண்டும் இப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மேலும் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். விஜய் டிவி மூலம் பிரபலமான ரோபோ ஷங்கர் மற்றும் ராமர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இதனால் இப்படம் முழுவதும் காமெடி ஜானரில் இருக்குமென கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் மிக விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தனுஷின் திரை வாழ்க்கையை முடக்கி விடலாம் என நினைத்த லதா ரஜினிகாந்துக்கு போட்டியாக பல திட்டங்களை கையில் வைத்துள்ளாராம் தனுஷ். அதில் ஒன்றுதான் படங்களை இயக்குவதாம். ஏனென்றால் லதாவின் மகள் ஐஸ்வர்யாவும் தற்போது பல படங்களை இயக்கி வருகிறார். அவருக்கு போட்டியாக தான் தற்போது தனுஷும் களத்தில் குதித்துள்ளார்.