அஞ்சலி பாப்பாவுக்கு என்ன ஆச்சு.. அஜித் மச்சினிச்சியின் லேட்டஸ்ட் புகைப்படத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்!

சினிமாத்துறையில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஷாமினி. இவர் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான அஞ்சலி படத்தில் மனநலம் குன்றிய குழந்தையாக நடித்ததன் மூலம் எட்டுத்திக்கும் பிரபலமானார்.

அதன் பிறகு துர்கா, தைப்பூசம், சிவசங்கரி, சின்னகண்ணம்மா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் பேபி ஷாமிலி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு என்று பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்தார்.

அதன்பின் இவர் சில படங்களில் இளம் நடிகை ஆக நடித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் திடீரென தன்னுடைய உடல் எடையை மொத்தமும் குறைத்து எலும்பும் தோலுமாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

அத்துடன் இது அஞ்சலி பாப்பாவாக நடித்த ஷாமினியா இது? என்று தமிழ் ரசிகர்களும் வாயடைத்துப் போய் உள்ளனர். தற்போது வெளியாகி இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்தால், ஷாமிலி முகம் வயதை விட கொஞ்சம் முதிர்ச்சியடைந்து காணப்படுகிறது.

நடிகை ஷாமினி, தல அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியின் தங்கை என்பது அனைவரும் அறிந்ததே. அக்கா இருக்கும் அழகு கூட தங்கச்சிக்கு இல்லையே என்பதை ரசிகர்களின் ஏக்கம்.

ஏற்கனவே பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவிக்கும் ஷாமினிக்கு அவருடைய இந்த திடீர் மாறுதல், அவரின் சினிமா கெரியாருக்கு எந்த அளவுக்கு உதவும் என்பது கேள்விக்குறிதான்.