அஜீத்தை கிண்டல் பண்ண நீ யாருடா வெண்ண.? பதிலடி கொடுத்த பிரபல தயாரிப்பாளர்

வலிமை திரைப்படம் வெளியான பிறகு அந்தப் படம் குறித்து விமர்சனம் செய்த சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பல சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமாகும் அளவிற்கு அஜித் ரசிகர்கள் அவரை போட்டு செய்து வருகின்றனர். இருந்தும் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய சினிமா விமர்சன பணியை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார். இந்த நேரத்தில் வலிமை படத்தை தாண்டி அஜித்தை உருவ கேலி செய்ததாக அவர் மீது பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.

அப்படி பல திரைப்பிரபலங்கள் ப்ளூ சட்டை மாறன் மீது மிகுந்த கோபத்தில் இருக்கக்கூடிய நேரத்தில் அஜித்குமாரை உருவ கேலி செய்ததற்காக ஒரு திரை பிரபலம் இந்த ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்க விட்டிருக்கிறார். அஜித்தின் தீவிர ரசிகரும் சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே. சுரேஷ் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டு மேடையில் பேசும்போது தற்போது வெளியாகும் படங்களை எத்தனையோ நபர்கள் பார்த்துவிட்டு விமர்சனம் செய்கின்றனர். மிகவும் நாகரீகமாக தங்களுடைய கருத்துக்களை முன்வைக்கின்றனர். அதை விட்டுவிட்டு ஒருவரின் உருவத்தை வைத்து கிண்டல் செய்து அதன் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்பது முற்றிலும் தவறானது.

அஜித்தை உருவ கேலி செய்வதற்கு நீ யார் நீ என்ன அவ்ளோ பெரிய வெண்ணையா என்று கேட்டு மேடையை அதிர வைத்தார் ஆர்கே.சுரேஷ் அவர்கள். திரைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல பல கோடி ரூபாய் பணம் போட்டு இந்த திரைப்படத்தை எடுக்கும் போது அதை மிக ஈசியாக வந்து விமர்சனம் என்ற பெயரில் கெடுத்து விடுகிறார்கள் என்று பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் முடிந்தால் நான் நடித்த படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் சொல்லுங்கள் அப்போது தெரியும் நான் யார் என்று கூறி மேடையிலேயே சவால் விட்டார் ஆர்கே.சுரேஷ்.

இதே போன்று தொடர்ந்து ப்ளூ சட்டை மாறனுக்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் , எதிரான கருத்துக்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எதற்கும் சளைக்காமல் தொடர்ந்து தன்னுடைய சினிமா விமர்சகர் பணியை செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். இவர் செய்யும் விமர்சனங்களால் பல படங்களின் தரம் குறைவது தாண்டி படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்திப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது என்று பல திரை பிரபலங்களும் திரைத் துறையைச் சார்ந்தவர்களும் இவர் மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆனால் இம்முறை வலிமை திரைப்படத்தை பார்த்துவிட்டு இவர் செய்த விமர்சனத்தை தாண்டி அஜித்தை தனிப்பட்ட முறையில் அவரின் உருவத்தை வைத்து கேலி செய்ததால் தான் இதுபோன்ற பல சர்ச்சைகளும் எதிரான கருத்துக்களும் ப்ளூ சட்டை மாறன் மீது வந்து கொண்டிருக்கிறது . இருந்தும் சமூக வலைதள பக்கங்களில் பெரிய ஹீரோக்களை இழிவுபடுத்தும் விதமாக தொடர்ந்து தனது பதிவுகளை பதிவிட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன். இப்படி ஊரெல்லாம் படம் எடுப்பவர்களை வறுத்தெடுக்கும் ப்ளூ சட்டை மாறன் எடுத்த ஆண்டி இண்டியன் படத்தை ஒரு மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து பார்க்க முடியவில்லை வெறும் வாய் மட்டும் தான் இவர் பேசுகிறார் என்று இவரை சினிமா ரசிகர்கள் ஒருபுறம் சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.