அஜித் வினோத்திற்கு வாய்ப்பு தர இதுதான் காரணம்.. சினிமால இது ரொம்ப முக்கியம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. வலிமை படத்தின் ஸ்டாண்ட் கொரியோகிராஃபர் திலீப் சுப்பராயன் படத்தில் இருக்கும் சண்டைக் காட்சிகள் ரசிகர்களுக்கு பிடிக்கும் என தெரிவித்தார்.

மேலும் படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு சண்டைக்காட்சிகளிலும் அஜீத் தனது முழு உழைப்பை போட்டு இருப்பதாகவும் இது திரையரங்கில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் எனக் கூறினார். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் வினோத்திடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது. கேள்விகளுக்கு பதிலளித்த வினோத் அஜித்திடம் தான் கேட்ட கேள்வியை பற்றியும் வெளிப்படையாக கூறினார். அதாவது சார் நீங்க எனக்கு நேர்கொண்டபார்வை என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தீங்க, அது கமர்சியல் படம் என்பதால் எனக்கு இன்னொரு படம் இயக்குவதற்கான வாய்ப்பு கொடுத்தீங்க, என்னுடைய வாழ்க்கையில் மாற்றம் வந்திருச்சு.

இதே மாதிரி நிறைய இயக்குனருக்கு நீங்க வாய்ப்பு கொடுத்தால் அவர்களது வாழ்க்கையும் மாறும் எனக் கூறினேன் என்பதை கூறினார். அதற்கு அஜித் சார் எனக்கு கம்பர்ட்டா வேலை செய்து ரொம்ப முக்கியம் யாருடைய கம்பர்ட்டா  இருக்கிறேன்  ஃபீல் பண்றேன்னோ அவங்ககூட தொடர்ந்து வேலை செய்கிறேன் என கூறினார். அதனால்தான் தொடர்ந்து வினோத் உடைய படங்களில் அஜித் நடித்து வருவதாக கூறினார்.

அப்பாவைப் பின்பற்றத் துடிக்கும் மகன். ரெட் கார்டு வாங்கி விடாதீர்கள்!

தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்தமான நகைச்சுவையின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் வடிவேலு. இவர் படத்தில் பேசிய வசனங்கள் அனைத்தும் தற்போது வரை சோசியல் மீடியாவில் ட்ரண்டாக ...
AllEscort