அஜித், விஜய் நடிப்பில் உருவாகவுள்ள சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. கதை எல்லாம் ரெடியாம்

தற்போது தமிழ் சினிமாவில் போட்டியாக பார்க்கப்படுவதும் அஜித், விஜய் தான். இந்த இரு நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அவர்களது ரசிகர்கள் இடையே இணையத்தில் நிறைய கருத்து மோதல்கள் ஏற்படுகிறது. மேலும் இன்று வரை அது ஒரு தொடர்கதையாக தான் உள்ளது.

இந்நிலையில் ஆரம்பத்தில் விஜய் மற்றும் அஜித் இருவரும் இரண்டு அல்லது மூன்று படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் அதன் பின்பு இவர்கள் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் இவர்கள் இருவருமே தனியாக மாஸ் நடிகர்களாக பல ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் விஜய், அஜித் சேர்ந்து நடிக்க உள்ளார்கள் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் மங்காத்தா. இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என ரசிகர்கள் வெங்கட் பிரபுவுடன் கேள்வி எழுப்பி வந்தனர்.

தற்போது அதற்கு பதிலளித்த வெங்கட்பிரபுவும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாக கதை தயார் செய்துள்ளேன். இந்த கதையை அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து தான் எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். மேலும் மங்காத்தா 2 படத்தின் கதையை இருவரிடமும் கூறிவிட்டேன்.

மேலும், மங்காத்தா 2 படம் விரைவில் உருவாகும் என தான் நம்புவதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித், விஜய் இருவரையும் ஒரே திரையில் பார்த்து பல வருடங்கள் ஆகிறது.

வெங்கட்பிரபுவின் இந்த முயற்சியால் இது விரைவில் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அஜித் மற்றும் விஜய் இருவரும் தனித்தனியாக தங்கள் படங்களில் பிசியாக உள்ளனர். அதனால் அவர்கள் நடிக்க சம்மதம் தெரிவித்த பிறகும், இவர்கள் இருவரது கால்ஷீட்டு கிடைத்தால் மட்டுமே இந்த படம் உருவாகும்.