அஜித், விஜய்க்கு ஒரு மறைமுக எச்சரிக்கை.. தூக்கிவிட்ட ஏணியை எட்டி உதைக்காதிங்க

விஜய் நெல்சன் திலீப்குமார் உடன் இணைந்து பீஸ்ட் படத்திலும், அஜித் எச்.வினோத் உடன் இணைந்து வலிமை படத்திலும் நடித்து வருகிறார்கள். சமீபகாலமாக விஜய், அஜித் படங்கள் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் இவர்கள் நடித்த படங்கள் வெளியாவதற்கு முன்பே அடுத்த படங்களுக்கான வேலைகள் தொடங்கும். தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் போட்டி போட்டு விஜய், அஜித்திடம் கதை கூறி வருகின்றனர்.

இத்தனை ஆண்டு காலமாக விஜய் தமிழ் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே பெரிய அளவில் வாய்ப்பு கொடுத்து வந்தார். இதன் மூலம் பல தயாரிப்பாளர்கள் லாபம் பெற்றனர். அதற்குக் காரணம் ஆரம்ப காலத்தில் விஜய்யை வைத்து தமிழ் தயாரிப்பாளர்கள் மட்டுமே படத்தை தயாரித்து வந்தனர். அந்த நன்றியை மறக்காமல் இருந்த விஜய் தற்போது அதனை மீறி விட்டதாக கூறி வருகின்றனர்.

அதாவது தற்போது தளபதி66 படத்தை தெலுங்கில் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பதற்கு விஜய் சம்மதித்துள்ளார். இதனால் தற்போது தமிழ் தயாரிப்பாளர்கள் பலரும் விஜயின் மீது வருத்தத்தில் இருப்பதாக கூறி வருகின்றனர். மேலும் இவ்வளவு பெரிய பிராஜெக்ட் தெலுங்கு தயாரிப்பாளருக்கு  கொடுப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது எனவும் ஒரு சில தயாரிப்பாளர்கள் சிபொலம்பி வருகிறார்கள்.

அதேபோல் தான் அஜித்தையும் ஆரம்ப காலத்தில் தமிழ் தயாரிப்பாளர்கள் மட்டுமே படங்களை தயாரித்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக அஜித்தும் போனி கபூர் உடன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பணியாற்றி வருகிறார். இதனால் அஜித்தும் நன்றி மறந்து விட்டதாக ஒரு சில தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

இதனை பிரபல பத்திரிகைகளான பிஸ்மி, ஆர்எஸ் அந்தனன் மற்றும் சக்திவேல் மூவரும் வெளிப்படையாக இந்த தகவலை கூறியுள்ளனர். மேலும் அடுத்தடுத்து தமிழ் தயாரிப்பாளர்களுக்கு இவர்கள் இருவரும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் ஆரம்பகாலத்தில் உதவியவர்களை மறந்துவிடக்கூடாது எனவும் அறிவுரை கூறியுள்ளனர்.

திரை உலகை மிரள வைத்த சிவாஜி.. ஒரே படத்தில் செய்த 5 சாதனைகள்

தற்போது வரை சிவாஜியின் இடத்தை எந்த நடிகராலும் பிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அவருடைய நடிப்பை யாராலும் ஈடு கொடுக்க முடியாது. இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தங்கப்பதக்கம். 1974 ஆம் ஆண்டு பி ...