அஜித் மற்றும் ரஜினி இருவருக்கும் உள்ள ஒற்றுமை.. புல்லரிக்க செய்த நயன்தாரா

நயன்தாரா அஜித்துடன் பில்லா தொடங்கி விசுவாசம் வரை கிட்டத்தட்ட 6 படங்களுக்கு மேல் பணியாற்றி விட்டார். இருவருக்கும் ஒரு நல்ல நட்பு வட்டாரம் இருக்கிறது.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனும் சந்திரமுகி, குசேலன், தர்பார், அண்ணாத்த வரை பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் நயன்தாரா.

நயன்தாரா, விசுவாசம் படத்தின் போது ரஜினி மற்றும் அஜித்தை பற்றி கூறிய ஒரு விஷயத்தை இப்பொழுது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சரத்குமாரின், ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாரா தற்போது வரை ஏகப்பட்ட படங்களில் நடித்து, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  நயன்தாரா முன்பு பேசிய ஒரு வீடியோவில் அஜித் மற்றும் ரஜினி இருவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமையை பேசியுள்ளார்.

ரஜினியும்,  அஜீத்தும் பெண்கள் யாராவது வந்தால் எழுந்து நின்று மரியாதையுடன் கண்களை பார்த்து பேசக்கூடிய உண்மையான பண்பு கொண்டவர்கள். எந்த சூழ்நிலையிலும், தன்மையுடனும், பண்புடனும் நடந்து கொள்ளும் ஒழுக்கம் உடையவர்கள்.

அத்தகைய உயரிய பண்பு இருப்பதால்தான் அவர்கள் இன்று உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று பெருமிதமாக கூறியுள்ளார் நயன்தாரா.