அஜித் மகன், மகளை நடிக்க வைப்பாரா.. ரசிகர்களின் பலநாள் எதிர்பார்ப்புக்கு கிடைத்த பதில்

அஜித் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். மேலும் அதிக ரசிகர்களை பெற்றுள்ள நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் மட்டுமே நடித்து வருகிறார். அந்தப் படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெறுகிறது.

இந்நிலையில் அஜித் மகள் மற்றும் மகன் சினிமாவில் நடிப்பீர்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோதே ஷாலினி அஜித்தை திருமணம் செய்து கொண்டார். அதன்பின்பு யாருடைய முடிவு என்பது தெரியவில்லை ஷாலினி சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

இந்நிலையில் தற்போது அஜித் மகள் மற்றும் மகன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து ஒதுங்கி இருப்பதால் அஜித் குழந்தைகளும் சினிமாவில் நடிப்பதற்கு 100 சதவீத வாய்ப்பு இல்லை.

மேலும், அஜித் குடும்பம் எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை. அவ்வாறு அஜித் தன்னுடைய குடும்பம் சார்ந்த விஷயங்களை வெளியுலகத்திற்கு காட்டாமல் உள்ளார். மேலும், சமீபத்தில் ஒரு பேட்டியில் வெங்கட்பிரபுவிடம் ஷாலினி மீண்டும் சினிமாவில் நடிப்பாரா, அவரை வைத்து படம் இயக்குவீர்களா என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, அஜித் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்றும், கண்டிப்பாக விஷாலி சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கமாட்டார் என பதில் அளித்தார். அதுமட்டுமின்றி அஜித்துக்கு தற்போது படங்களில் நடிக்க ஆர்வம் இல்லாமல் தான் உள்ளார்.

தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அஜித் தற்போது படங்களில் நடித்து வருகிறார். அதுவும் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அஜித் நடிப்புக்கு முழுக்கு போட்டு வெளிநாட்டில் செட்டில் ஆக உள்ளார் என்ற பேச்சுக்களும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.