அஜித் பட நடிகையை தூக்கிச்சென்ற பிக் பாஸ்.. பக்காவா ப்ளான் போட்ட கமல்ஹாசன்

விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்கள் மிகவும் நேர்த்தியான முறையில் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏற்றார்போல தொகுப்பாளர்கள் மிகவும் சுவாரஸ்யமாக அந்த நிகழ்ச்சியை கொண்டு செல்வார்கள்.

அந்தவகையில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியும் மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றது. ஒவ்வொரு சீசனிலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் அடுத்த மாதம் சீசன் 5 தொடங்க உள்ளது.

பிக்பாஸ் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குவது மற்றொரு சிறப்பான ஒன்று. நடிகரும் அரசியல்வாதியுமான கமலஹாசன் நேரடியாக மக்களை தொடர்பு கொண்டு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

தற்போது பிக்பாஸ் சீசன் 5 காண விளம்பரங்கள் பிரபலமாகி வருகிறது. அதில் கமலஹாசன் சமையலை செய்து கொண்டு பிக்பாஸ் இல்லத்தைப் பற்றிக் கூறுவது போல அமைந்துள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்களை பொறுத்தே நிகழ்ச்சியின் சுவாரசியம் இருக்கும்.

இந்த சீசனில் யார் யார் பங்கு கொள்கிறார் என்ற செய்திகள் அவ்வப்போது இணையதளத்தில் வந்து கொண்டு இருக்கின்றன. இதில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த பார்வதி நாயர் கலந்து கொள்கிறார்.

மேலும் வடிவுகரசி, நடிகர் ஜான் விஜய், சீரியல் நடிகையான பவானி ரெட்டி, இணையதள பிரபலம் ஜி பி முத்து, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைனா என்ற நந்தினி லக்ஷ்மி ராமகிருஷ்ணன், மேலும் ஷகிலாவின் மகள் போன்ற பல பிரபலங்களும் கலந்து கொள்வதாக தெரியவந்துள்ளது.

ஹிட் படங்களை காப்பி அடித்த வாரிசு பட போஸ்டர்.. ஒன்னு கூட சொந்தமா யோசிக்கலயா

சமூக வலைதளங்களில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரே விஷயம் விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தை பற்றி தான். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தின் முதல் போஸ்டர் இரு தினங்களுக்கு ...