அஜித் பட தயாரிப்பாளரை வசியம் செய்த சூர்யா.. இந்த ஒரு படத்தை நீங்க பண்ணுங்க.!

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களும் ப்ரமோஷன்களிலும் சரி, தியேட்டர் வாங்குவதிலும் சரிகெட்டிக்காரர்கள் தான். அதனால் தற்போது சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தை பற்றி கவலை பட போவதில்லை ஏனென்றால் படத்தை எப்படியும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் புரோமோஷன்களிலேயே வெற்றியடைய செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருப்பதாக தெரிகிறது.

அதனால் தற்போது சூர்யா அடுத்த படத்தினை பிரம்மாண்ட தயாரிப்பாளரிடம் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அஜித்தை வைத்து பல படங்களை தயாரித்துள்ள சத்யஜோதி நிறுவனத்திடம் சூர்யா ஒரு படத்தை தயாரிப்பதற்கு வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.

தற்போது வாடிவாசல் படத்தை கலைபுலி எஸ் தாணு தயாரிப்பதால்அந்த படத்தினை பற்றியும் கவலைப்பட தேவையில்லை ஆனால் புதிதாக நடிக்கும் படங்களில் சிறு தயாரிப்பாளரிடம் சிக்கிக்கொண்டால் படத்தை பெரிய அளவில் புரமோஷன் செய்ய முடியாது என்பதற்காகவே சூர்யா சத்யஜோதி நிறுவனத்திடம் தஞ்சம் அடைந்ததாக தெரிகிறது.

மேலும் இப்படத்திற்கு பிறகு சூர்யா அடுத்தடுத்துமுன்னணி தயாரிப்பாளர்களின் படங்களில் மட்டுமே நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தற்போது சூர்யாவை வைத்து தயாரிப்பதற்கு சிறு தயாரிப்பாளர்கள் முன் வந்தாலும் சூர்யா முன்னணி தயாரிப்பாளர்களுக்கு மட்டும் வாய்ப்பு தருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. சிறிய பட்ஜெட் படங்களை மட்டும் தயாரிக்கும் சூர்யா ஏன் சிறிய தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது எனவும் கேள்வி எழுந்து வருகிறது.