அஜித் பட தயாரிப்பாளருடன் கூட்டணி போட்ட RJ பாலாஜி.. 45 நாளில் ஷூட்டிங் முடிக்க கட்டளை.!

ரேடியோ ஜாக்கியாக இருந்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாறியவர் தான் ஆர்.ஜே.பாலாஜி. ஆரம்ப காலத்தில் காமெடி நடிகராக மட்டுமே நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜிக்கும் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது போல. காமெடியனாக இருந்த இவர் திடீரென எல்.கே.ஜி என்ற படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். காமெடி கலந்த அரசியல் படமாக உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜியும், என்.ஜே.சரவணனும் இணைந்து இயக்கி இருந்த மூக்குத்தி அம்மன் படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதேபோல் ஆர்.ஜே.பாலாஜியும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

தற்போது ஆர்.ஜே.பாலாஜி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இப்படத்தை இயக்கவும் செய்கிறார். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடித்து வருகிறார்.

பதாய் ஹோ படம் ஹிந்தியில் சுமார் 220 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த படமாகும். அதுமட்டுமல்லாமல் தேசிய விருதையும் இப்படம் வென்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்து வருவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழில் வீட்ல விசேஷங்க என பெயர் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் பகுதிகளில் கடந்த வாரம் தொடங்கியுள்ளதாம். மேலும் தொடர்ச்சியாக 45 நாட்கள் ஒரே கட்டமாக படப்பிடிப்பு முழுவதையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே விரைவில் இப்படத்தை திரையில் பார்க்கலாம் என தெரிகிறது.

சிம்புவுக்கு அடுத்த ஹிட் பார்சல்.. விஜய சேதுபதியை தூக்கி சாப்பிட வரும் புது வில்லன்

மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் சிம்பு தற்போது பிஸியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு, பத்து தலை போன்ற திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. இதை அடுத்து ...