அஜித், நயன்தாராவை மேடையில் கிழித்து தொங்கவிட்ட பிரபலம்.. பாரதிராஜா கொடுத்த தரமான பதிலடி

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் அது தொடர்பான அனைத்து பணிகளிலும் அந்த படத்தில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் கலந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் ஒரு கட்டத்திற்குப் பிறகு சினிமாவில் வளர்ந்தவுடன் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கிடையாது.

இதனால் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. ஏனென்றால் ஒரு திரைப்படம் மக்களை சென்றடைய இதுபோன்ற பிரமோஷன் நிகழ்ச்சிகள் முக்கிய காரணமாக அமைகின்றது. தற்போது திரையுலகில் இந்த நிலை மாறுபட்டு வருகிறது.

சமீபகாலமாக பல நடிகர், நடிகைகள் இந்த விஷயத்தில் அந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு தயாரிப்பாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதாவது அஜித், நயன்தாரா போன்றவர்கள் இதுபோன்ற பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கிடையாது.

இருவரும் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். அப்படி நடிக்கும் திரைப்படங்களின் ப்ரமோஷன்களுக்கு இவர்கள் வருவது கிடையாது. நயன்தாரா தன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவாகும் படங்களின் பிரமோஷன்களில் மட்டும் கலந்து கொள்கிறார்.

இதனால் அவரை தயாரிப்பாளர் கே ராஜன் உட்பட பலரும் விமர்சித்து வந்தனர். மேலும் நடிகர்கள் அனைவரும் இது போன்ற புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும் என்று பெப்சி உறுப்பினர்கள் கே ராஜன் மற்றும் ஜாகுவார் தங்கம் ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

அவர்களின் இந்த முடிவுக்கு இயக்குனர் பாரதிராஜா தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். என்னவென்றால் பிரமோஷன் பணிகளில் கலந்து கொள்வது என்பது நடிகர், நடிகைகளின் சொந்த விருப்பம். ஒரு படத்தில் அவர்கள் நடிக்க கையெழுத்திடும் முன்பு பிரமோஷனில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறிய பிறகுதான் கமிட் ஆகிறார்கள்.

அவர்களின் அந்த முடிவுக்கு தயாரிப்பாளர்கள் சரி என்று சொல்லிவிட்டு இப்போது அவர்களை குறை சொல்வது ஏன் என்று பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தில் நடிகர்களை புக் செய்யும் போது முன்கூட்டியே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூற வேண்டும்.

அவர்கள் சம்மதம் தெரிவித்து விட்டு பின்னர் பிரமோஷனில் கலந்து கொள்ளவில்லை என்றால் அப்போது அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கலாம் என்று யோசனையும் கூறியுள்ளார். பாரதிராஜாவின் இந்த கருத்துக்கு திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.