அஜித், நயன்தாராவை மேடையில் கிழித்த தயாரிப்பாளர்.. பதிலுக்கு திட்டி வீடியோ வெளியிட்ட பயில்வான்

திரையுலகில் இருக்கும் பல பிரபலங்களைப் பற்றிய விஷயங்களை தைரியமாக பொதுவெளியில் பேசி வருபவர் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன். அவர் பேசும் சில விஷயங்கள் ஏடாகூடமாக இருந்தாலும் பல விஷயங்கள் ஏற்புடையதாகவே இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் இவருடைய பேச்சைக் கேட்பதற்கு என்றே சில ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். தற்போது இவர் தயாரிப்பாளர் ராஜன் பற்றிய சில தகவல்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை தயாரித்திருக்கும் ராஜன் தற்போது விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை பற்றி கருத்துகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் அவர்கள் வாங்கும் சம்பளம் குறித்தும் இவர் அவதூறான கருத்துக்களை பேசி வருகிறார். இவர் கலந்து கொள்ளும் இசை வெளியீட்டு விழா போன்றவற்றில் சம்பந்தப்பட்ட திரைப்படத்தை பற்றி பேசாமல் ஏதாவது ஒரு நடிகரையோ, நடிகையையோ வம்புக்கு இழுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதைப் பற்றித்தான் தற்போது பயில்வான் ரங்கநாதன் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் எந்த நடிகர் எவ்வளவு கோடி சம்பளம் வாங்கினால் உங்களுக்கு என்ன. மேலும் தங்களுடைய படம் நஷ்டம் என்று எந்த ஒரு தயாரிப்பாளரும் கூறவில்லை.

நீங்கள் ஏன் அஜித், விஜய் போன்றவர்களின் திரைப்படங்கள் இவ்வளவு கோடி நஷ்டம் அடைந்து விட்டது என்று கூறுகிறீர்கள். உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை இசை வெளியீட்டு விழாவிற்கு வந்தோமா, போனோமா என்று இருக்க வேண்டியதுதானே என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். தங்கள் சொந்தப்  பட விளம்பரத்திற்கு வரும் நயன்தாரா ஏன் மற்ற தயாரிப்பாளர் படத்திற்கு வருவதில்லை என்ற கேள்வியை மேடையில் வைத்து கிழித்தார் ராஜன்.

படம் ஒப்பந்தம் செய்யும்போதே இதுபோன்ற விளம்பரத்திற்கு வரமாட்டோம் என்று அஜீத் மற்றும் நயன்தாரா கூறியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் அனைவருக்கும் தெரியும், ஆனாலும் ஏன் இதை விமர்சித்து வருகிறார் என்று தெரியவில்லை.

அவர் படங்கள் தயாரிக்கும் போது விஜய் மற்றும் அஜீத்தின் கால்ஷீட் கிடைக்கவில்லை என்ற பொறாமையில் தான் அவர் இப்படி அவதூறாக பேசுவதாகவும், அவர் பேசுவது அனைத்தும் பொய் தான். ரசிகர்கள் யாரும் அவர் கூறுவதை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு விஷயங்களையும் கூறிவிட்டு அவர் தன்னைப் பற்றியும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது நானும் திரை பிரபலங்களை பற்றி நிறைய விஷயங்களை கூறுகின்றேன். ஆனால் நான் பொய் பேசியதே கிடையாது. நான் கூறுவது அனைத்தும் உண்மை என்று மக்களின் மைண்ட் வாய்ஸை தெரிந்து கொண்டு பதிலளித்துள்ளார்.