அஜித் தான் வேணும் அடம் பிடிக்கும் நடிகை.. பேச்சு வாக்குல வாய்ப்பு கேட்டுட்டீங்க

வருகின்ற மார்ச் 11ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது ராதே ஷ்யாம் திரைப்படம். இந்த திரைப்படத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே முக்கியமான ஆகியோர் நடித்திருக்கின்றனர். தற்போது இந்தப் படத்திற்கான புரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. அப்படி இந்த படத்திற்கான புரமோஷன் நடைபெறும்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த படக் குழு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறது.

அப்படி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இந்த படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே தற்போது தளபதி பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதனால் அது குறித்து பேசிய நடிகை விஜய்யோடு நடித்தது எனக்கு மிகவும் நல்ல அனுபவத்தை கொடுத்தது என்றும் அவரோடு நடித்தது நன்றாக இருந்தது என்றும் கூறினார்.

ஆசைப்பட்டபடி விஜய்யோடு இணைந்து நடித்து விட்டேன். தற்போது அஜித்தோடு நடிப்பதற்கு மிகவும் ஆசையாக இருப்பதாக விருப்பம் தெரிவித்தார். ஒருவேளை விஜய் அஜித் என இருவரோடும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நான் நடிப்பேன் என்று ஒரு போடு போட்டிருக்கிறார். மேலும் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக இருப்பதால் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றும் கண்டிப்பாக இது உங்களுக்கு பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

இதனை அறிந்த ரசிகர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய ஹீரோயின்கள் அனைவரும் ஒரே மாதிரி தான் இருக்கின்றனர். அவர்கள் கூறுகின்ற அத்தனையும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. தற்போது பூஜா ஹெக்டே தான் நடிக்கும் படத்தில் இருந்த தளபதி விஜய்யை பெருமையாக பேசி விட்டு அப்படியே அடுத்த படத்தின் சான்ஸ்காகவும் அப்படியே ஒரு பிட்டு போட்டு விட்டார்..

இனி அஜீத்தின் அடுத்த படத்திற்கு கதாநாயகியை தேடும் போது அதில் கண்டிப்பாக பூஜா ஹெக்டே பெயர் மேலே இருக்கும். அதை பார்த்துவிட்டு அவருக்காக அவர் மீண்டும் அஜீத்தோடு இணைந்து ஒரு புதிய படம் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது . மேடையில் புகழ்வது போலப் புகழ்ந்து விட்டு வாய்ப்பும் கேட்டுவிட்டார் பூஜா ஹெக்டே . படத்தில் நடிக்கும்போது அந்த நடிகரை பெருமையாகப் பேசுவது படம் முடிந்த பிறகு மற்றொரு நடிகரை பெருமையாகப் பேசுவது என்பதே இந்த கதாநாயகிகளின் வேலையாகி விட்டது என்று கூறி சமூக வலைதள வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.