அஜித் அடுத்த படம் இவருடன்தான்.. உறுதியான தகவல்! அப்பனா மாஸ் பன்ச்க்கு பஞ்சம் இருக்காது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஹச்.வினோத் இயக்க பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில் வலிமை படம் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். இந்த தகவலை தயாரிப்பாளர் போனி கபூரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

அதாவது வலிமை படத்தை தொடரந்து அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்றும், அந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்க உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளயாகாமல் இருந்து வந்த நிலையில், தற்போது போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போனி கபூர், “ஹெச்.வினோத் மீது நம்பிக்கை வர காரணம் அவர் செய்யும் பணிதான். அவர் பேசமாட்டார். அவர் வேலையே அவரை பற்றி சொல்லிவிடும். தன்னைத் தன் படங்கள் மூலமே அவர் வெளிப்படுத்துகிறார். சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் சில கதைகளை சொல்ல வினோத்தை அஜித் மும்பைக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது என் மனைவி வினோத்தோடு தமிழில் உரையாடினார். வினோத் கூறிய கதைகள் அவரை அதிகம் ஈர்த்தன. வினோத் தெளிவாக இருந்தார். அதனால்தான் எங்கள் பயணம் மகிழ்ச்சியானதாக அமைந்திருக்கிறது. ஏன் எனது அடுத்த படம் கூட அஜித் – வினோத் கூட்டணியோடு தான்” என கூறி இந்த செய்தியை உறுதிபடுத்தியுள்ளார்.

நடிகர் அஜித் ஏற்கனவே இயக்குனர் சிறுத்தை சிவா உடன் வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து மூன்று படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இயக்குனர் வினோத்துடன் தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தையும் வினோத் இயக்க உள்ளார்.