அஜித்தை மறைமுகமாக தாக்கினாரா விஜய்.? குட்டி கதையால் வந்த பெரும் பஞ்சாயத்து

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தளபதி விஜய் சன் டிவியில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பிறகு தற்போது முதல் முதலாக மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான நேர்காணலில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சி குறித்து தற்போது சோஷியல் மீடியாவில் தல, தளபதி ரசிகர்கள் விமர்சித்து சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கேள்வி கேட்க விஜய் பதில் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது. அப்போது மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி என்பது பிரபலமாக பேசப்பட்டதுடன் எப்போதுமே குட்டி கதை சொல்வதும் விஜயின் அடையாளமாகவே மாறிவிட்டது.

இதனால் இந்த நேர்காணலில் நெல்சன் விஜய்யிடம் குட்டி ஸ்டோரி சொல்லும்படி வற்புறுத்தியதால், கடைசியாக ஒரு கதையை விஜய் சொன்னார். அந்த குட்டி கதையில் புல்லாங்குழல் மற்றும் ஃபுட்பால் வைத்து ஒரு மெசேஜை மக்களுக்கு தெரிவித்தார்.

புல்லாங்குழல் போல் இருக்கவேண்டும், புட்பால் போல் இருக்கக்கூடாது என்று விஜய் தெரிவித்தார். அதாவது புல்லாங்குழல் வாங்கிய காற்றை வெளியே அனுப்பி அடுத்தவருக்கு பயன்படும் படி செய்கிறது.

ஆனால் கால்பந்து காற்றை நிரப்பிக் கொண்டு எல்லாரிடமும் மிதி வாங்குகிறது. இந்தக் கதையை சொல்லி விஜய் ரசிகர்களை கவர்ந்தார். மற்றவர்களுக்கு பயன்படும் வகையிலேயே இருக்க வேண்டும். ஆனால் மற்றவர்கள் நம்மை பயன்படுத்தி விடக்கூடாது என விஜய் ரசிகர்களுக்கு இந்த கதையின் மூலம் மெசேஜ் சொல்லியிருந்தார்.

ஆனால் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கும் விஷயம் என்னவென்றால், அஜித்தை ஃபுட்பால் எனவும், விஜயை புல்லாங்குழல் எனவும் விஜய் ரசிகர்கள் கூறிவருகின்றனர். இது ஒன்றும் புதிதல்ல என்ன செய்தி கிடைத்தாலும் அதை வைத்து தல, தளபதி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அடித்துக் கொள்வது தானே வழக்கம்.