சமீப காலமாக அஜித்தை சுற்றி பல்வேறு விதமான வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படிதான் நேற்று ஒரு பெண் அஜித் வீட்டின் முன்பு நின்று தீக்குளிக்க முயற்சி செய்தார். சரியான நேரத்தில் போலீசார் வந்து அந்த பெண்ணை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் அந்தப் பெண் அஜித் வீட்டின் முன் நின்று ஏன் தீக்குளிக்க வேண்டும் என பலரும் கேட்டு வந்தனர். அதற்குப் பல்வேறு விதமான காரணங்களை பலரும் கூறி வருகின்றனர். அதாவது அஜித் மற்றும் ஷாலினி ஒரு முறை மருத்துவமனைக்கு செல்லும் போது அப்போது அந்த பெண் அந்த மருத்துவமனையில் வேலை செய்துள்ளார். அஜித் மற்றும் ஷாலினி வருவதை வீடியோவாக எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த மருத்துவமனை நிர்வாகிகள் அந்தப் பெண்ணை வேலையை விட்டு நீக்கி உள்ளனர். இதனால் தனக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை எனக் கூறி தீக்குளிக்க முயற்சி செய்தார். இந்த தகவலை அறிந்த ஷாலினி மருத்துவர் நிர்வாகத்திடம் பேசி மீண்டும் அந்தப் பெண் வேலை செய்வதற்கு உதவி செய்தார்.

ஆனால் மறுபடியும் இவர் மருத்துவமனையில் ஒரு சில தவறுகள் செய்ததால் மீண்டும் அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளனர். இதற்கும் அஜித் மற்றும் ஷாலினி இருவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அஜித் போன்ற பெரிய நடிகர்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக அந்த பெண் தீக்குளிக்க முயற்சி ஈடுபட்டதாக தெரிகிறது.

இதற்கு பலரும் அந்தப் பெண் தீ குளிக்கும் போது எப்படி எல்லோருக்கும் தெரியும். மீடியா மற்றும் போலீசார் எப்படி சரியான நேரத்தில் வந்தனர். இதனை பார்க்கும் போது யாரோ ஒருவர் அஜித்தின் பெயரை கெடுப்பதற்காக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது என கூறினர். ஆனால் ஒரு சிலர் அந்தப்பெண்ணை வேலையை விட்டு நீக்கி விட்டனர். மேலும் அவருடைய சர்டிபிகேட் அனைத்தையும் மருத்துவமனையை வைத்துள்ளது. இதனால் இவர் வேறு எங்கே வேலை செய்ய முடியவில்லை அதன் காரணமாக தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டதாக கூறி வருகின்றனர்.