அஜித்தை தாஜா செய்த நயன்தாரா.. ஏகே 62 உருவாக இதுதான் காரணம்

அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கு பிறகு அஜித் குமார் யாருடன் கூட்டணி அமைப்பார் என பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது விக்னேஷ் சிவனுடன் அஜித் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளனர்.

அஜித்குமார் நடிக்கும் ஏகே 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் லைகா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் ஏற்கனவே அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு பாடலையும் எச் வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை படத்தில் வேற மாதிரி, முதல் முகம் நீ ஆகிய பாடலை
எழுதியிருந்தார்.

அப்போதிலிருந்து அஜித்குமாருக்கு விக்னேஷ் சிவனுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது விக்னேஷ் சிவன்அஜித்குமார்ரிடம் படத்தின் கதையை பற்றி கூறியுள்ளார். அது அஜித்குமாருக்கு பிடித்துப்போக தற்போது இப்படத்தை தான் விக்னேஷ் சிவன் இயக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தும் நயன்தாராவும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அதனால் விக்னேஷ் சிவனுக்கு சிபாரிசு செய்து அஜித்தை வைத்து படம் இயக்கும்வாய்ப்பை வாங்கிக் கொடுத்துள்ளார் என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்

இதுவரைக்கும் அஜித்குமார் எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் படத்தை நடித்ததில்லை ஆனால் தற்போது லைக்கா நிறுவனத்துடன் அஜித்குமார் இணைந்துள்ளதால் அஜித் ரசிகர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். அதாவது அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அஜித்குமார் மற்ற நடிகர்களைப் போல கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைய மாட்டார் எனக் கூறி வந்தனர். ஆனால் தற்போது அஜித் குமார் லைக்கா நிறுவனத்துடன் இணைந்ததையடுத்து தற்போது பல ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.