அஜித்தை சீண்டி பார்த்த பத்திரிகையாளர்.. திரும்பி அவர் செய்த காரியம்!

திரைத்துறையில் இருக்கக் கூடிய பிரபலங்கள் தன்னை சுற்றியுள்ள நபர்களுக்கு செய்யும் சில உதவிகள், வெளியில் வெகுவாக பேசப்படும். அதனை ஒரு பப்ளிசிட்டி என்று கூட சில விமர்சனங்கள் வரும். ஆனால், சத்தமே இல்லாமல் பலரும் பல உதவிகள் செய்து வருகின்றனர். அதில் அதிகமாக அப்படி உதவிகளை செய்து விட்டு வெளியில் சொல்ல வேண்டாம் என்று சொல்பவர் தான், நடிகர் அஜித்குமார். சினிமாவில் நுழைவதற்கு முன்பாக, மெக்கானிக்காக தனது வாழ்க்கையினை தொடங்கினார்.

அதனால் அஜித்குமார் ஆரம்பத்தில் இருந்தே சிரமப்படும் மக்களுக்காக மனம் உருக கூடியவர் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி அவர் பல முறை, பலருக்கு உதவி செய்தும், எதுவும் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வார். சில நேரங்களில் அது தானாக வெளிவந்து விடுகிறது.

வீரம் படத்தில், “நாம கூட இருக்குறவங்கள நம்ம பாத்துக்கிட்டா..? மேலே இருக்கறவன் நம்மள பாத்துக்குவான்” என்று சொல்வது போல தன்னுடன் பணியாற்றும் பலருக்கும் உதவி செய்வதும் அதனை வெளியில் சொல்ல கூடாது, என்று அன்பு கட்டளை இடுவதும் வழக்கம். அப்படி இருக்கையில், சிலர் மனது கேக்காமல் வெளியில் சொல்லி விடுவார்கள்.

செய்தி தொடர்பாளர் ஒருவர் அஜித்தை பற்றிய முரண்பாடான கருத்துக்களை பதிவிட்டு செய்திகளை வெளியிட்டு வந்துள்ளார். இது அஜித்துக்கு தெரியவந்ததும் எந்த ஒரு விதத்திலும் கண்டிக்கவில்லையாம்.

ஒரு சமயத்தில் அந்த ரிப்போர்ட்டர் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்போது அஜித் தானாகவே முன்வந்து பண உதவி வேண்டுமா நான் செய்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த ரிப்போட்டர் வேண்டாம் என்று தெரிவித்து விட்டாராம் ஆனாலும் அஜித் விடவே இல்லையாம் மருத்துவமனைக்கு நேரடியாக தொடர்பு கொண்டு அவருக்கு மருத்துவ உதவி செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அடுத்த மூன்று மாதங்களுக்கு அவரது குடும்பத்திற்கு தேவையான செலவுகளையும் அவர் பார்த்துள்ளார். இப்படி தன்னை முரண்பாடான பேசிய வரையும் உதவி செய்து தனது உண்மையான குணத்தை வெளிப்படுத்தியுள்ளாராம். இந்த நிகழ்வுக்குப் பின் அந்த ரிப்போர்ட்டர் தனது குணத்தை மாற்றி விட்டாராம்.”அவரு உடம்பு மட்டும் வெள்ளை இல்லங்க, மனசும் வெள்ளைதான்” என்று அவரது ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.