அஜித்துடன் புகைப்படம் எடுத்த காமெடி நடிகர் .. தம்பிக்கு எங்கேயோ லக் இருக்குப்பா

அஜித் குமார் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறாமல் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாக படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால் படம் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அஜித் பொருத்தவரை எப்போதுமே எளிமையான மனிதர் அவர் எங்கு செல்கிறார் யாரை பார்க்கப் போகிறார் என்பது கூட யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் மட்டுமே பழகிக்கொண்டு தனது தனிப்பட்ட விஷயங்கள்கூட வெளிவந்த கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க கூடியவர்.

அதனால் இவரை பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளில் பார்க்க முடியாது அஜித் நடிக்கும் படங்களுக்கே அஜித்குமார் புரோமோஷன் செய்யமாட்டார். அந்த அளவிற்கு வெளியில் வரமாட்டார்.  ஆனால் தனக்கு நெருக்கமான நண்பர்களின் விழாக்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்வார். இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.

அஜித் குமார் தற்போது ஹச் வினோத் உடன் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. அஜித் ஏகே 61 படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற இருப்பதாகவும் படக்குழுவினர் கூறி வந்தனர்.

தற்போது அஜீத் குமாருடன் நடிகர் அம்பானி சங்கர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இப்புகைப்படத்தில் அஜித்குமார் மிக ஸ்டைலாக அழகாக உள்ளார். தற்போது அஜித் நடித்துவரும் ஏகே 61 படத்தின் புதிய லுக் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.