அஜித்துடன் நேரடியாக மோதும் சூர்யா.. இப்ப தெரிஞ்சிடும் யாரு வசூல் ராஜானு

வழக்கமாக ரஜினி, கமல் படங்களுக்கு இடையில் தான் போட்டிகள் வரும். அதுக்கு அப்புறமா அஜித், விஜய் இருவருக்கும் இடையில் நிறைய முறை போட்டிகள் வந்துள்ளது. ஒருவருக்கு வெற்றி ஒருவருக்குத் தோல்வி என பல தடவை முடிவுகள் அமைந்துள்ளது.

ரஜினிக்கு கமல் கூட போட்டி போட வேண்டும் என்ற எண்ணங்கள் இல்லாமல் இருந்தாலும், தற்போதைய காலகட்டத்தில் இரண்டு படங்களில் நடக்கும் போட்டிகள் தான் மிகப்பெரிய வியாபாரத்தை முடிவு செய்கிறது. அதனை உணர்ந்துதான் தீபாவளியன்று சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிம்பு மோதுகிறார். அதேபோல எந்த நடிகர்களாக இருந்தாலும் சரிக்கு சமமாக இருக்க வேண்டும் என்று இல்லாமல் யார் வேண்டுமானாலும் யார் கூட வேண்டுமானாலும் படத்தை ரிலீஸ் செய்து கொள்ளலாம். அதுதான் புத்திசாலித்தனம்.

இப்பொழுது அந்த முறையை பயன்படுத்தி சூர்யா அஜீத்துடன் மோதப்போகிறார். ஏற்கனவே இதுபோல் பலமுறை மோதி இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். தற்போதைய வலிமை படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை பார்த்தால் ரஜினிகாந்த் கூட யோசிச்சு தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். ஆனால் சூர்யா எதற்கும் துணிர்ந்தவனாய் துணிந்து இறங்கியுள்ளார்.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் படப்பிடிப்பு முடிந்து வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளனர். இப்படமும் ரசிகர்களிடம் ஒரு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இரண்டு பெரிய படங்களும் வெளியீட்டிற்கு காத்திருப்பதால் எந்த படத்திற்கு அதிகமான திரையரங்குகள் கிடைக்கும் மற்றும் ரசிகர்கள் ஆதரவு யாருக்கு அதிகமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அஜித் ரசிகர்கள் பார்க்குமிடமெல்லாம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்ததிலிருந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை எப்படியும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முயற்சியில் ஈடுபடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தற்போது இந்த இரண்டு திரைப்படங்களும் வருகிற கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிடத் திட்டமிட்டு உள்ளதால் எந்த படத்திற்கு அதிகமான திரையரங்குகள் கிடைக்கும் மற்றும் ரசிகர்களின் ஆதரவு யாருக்கு என்பதே படத்தின் வெளியிட்டு தினத்தன்று தான் தெரியும் என பலரும் கூறி வருகின்றனர்.

என்னுடைய முதல் படம் வாலி.. எனக்கு வாழ்க்கை கொடுத்த படம் இதுதான் பெருமையாக சொன்ன எஸ் ஜே சூர்யா

விஜய் தற்போது யாரும் எட்ட முடியாத உயரத்தில் உள்ளார். ஆனால் ஆரம்பத்தில் இவர் சினிமாவுக்கு வந்தபோது சந்திக்காத மோசமான விமர்சனங்களை கிடையாது. அதையெல்லாம் உள்வாங்கிக் கொண்ட விஜய் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் விஜய் ...
AllEscort