அஜித்துடன் செல்பி எடுத்த போலிஸ் உயர் அதிகாரி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அப்டேட் பற்றி அவரது ரசிகர்கள் கேட்காத இடமே இல்லை என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு சென்ற இடமெல்லாம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர். அதனால் படக்குழு வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

மேலும் அஜித் நடிப்பில் உருவான வலிமை படத்தின் அறிமுக பாடல் நாங்க வேற மாதிரி படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடலும் சமூக வலைதளங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பிறகு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

அஜித் குமார் வலிமை படத்தில் நடித்து முடித்த பிறகு பைக் ரைட் மேற்கொண்டார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தற்போது அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அடுத்த பாடலை வெளியிடும் படி கேட்டு வருகின்றனர்.

தல அஜித் குமார் தற்போது உலகம் முழுவதும் சுற்றிப் பார்ப்பதற்கு பைக் ட்ரிப் சென்றுள்ளார். தற்போது இந்தியாவின் எல்லையான வாகா வரை சென்று தனது எல்லை பாதுகாப்பு படையினருடன் தனது கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் தற்போது எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.