அஜித்துடன் எடுத்த ஒரே புகைப்படம்.. வைரலானதை பார்த்து மிரண்டு போன உலகம் சுற்றும் பெண்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.

நடிகர் அஜித் படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரங்களில் பைக் ரைய்டு அல்லது துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில் தற்போது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ளார். சமீபத்தில் கூட தஜ்மஹால் சென்ற நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் வைவரலானது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு டெல்லி சென்ற அஜித் அங்கு பைக்கில் உலகம் சுற்றும் மாரல் யாஜர்லு என்ற பெண்ணை நேரில் சந்தித்தார். மேலும் அவரிடம் உலகப் பயணம் குறித்து ஆலோசனைகளையும் அஜித் கேட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் மாரல் யாஜர்லுவை மீண்டும் நடிகர் அஜித் சந்தித்துள்ளார். தற்போது அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள் மாரல், நான் அஜித் குமாரிடம் உலகப் பயணம் குறித்து எனது அனுபவங்களையும், தகவல்களையும் பகிர்ந்து கொண்டேன்.

அஜித்குமார் மிகப்பெரிய நடிகர் என்பதை கூகுள் மூலம் தேடிப்பார்த்து தெரிந்து கொண்டேன். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது நான் அவரை சந்தித்தபோது எடுத்த புகைப்படம் வைரலானதை வைத்து தெரிந்தது. ஒரு பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் எளிமையான மனிதராக பழகுகிறார்.

அஜித் மிக தன்னடக்கமாக பேசுகிறார். மரியாதைக்குரிய மனிதராகவும் நடந்து கொண்டார். மிகவும் சிறந்த மனிதர். அவர் சமூக வலைதளங்களில் இல்லை. இதனால் அவரது சுதந்திரத்தில் நாம் தலையிடக் கூடாது என்பதால் அவரது அனுமதி பெற்ற பின்னரே புகைப்படங்களை பகிர்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

திருமணக்கோலத்தில் வெளிவந்த ரம்யா பாண்டியனின் புகைப்படம்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

நடிகை  ரம்யா பாண்டியன் ஜோக்கர் படம்  மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்பு சமுத்தரகனி உடன் ஆண் தேவதை படத்திலும் நடித்து இருப்பார். அந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் படவாய்ப்புகளும் ...
AllEscort