அஜித்துக்கு மட்டும் இத்தனை கோடி.. விக்னேஷ் சிவனுக்கு வெறும் லட்சங்களா!

அஜித் தற்போது வலிமை முடித்த கையோடு இதே கூட்டணியில் ஏகே 61 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐந்தாவது முறை நயன்தாரா நடிக்க உள்ளார்.

ஏகே 62 படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் ஏகே 62 படத்தில் அஜித் நடிப்பதற்கு சம்பளமாக 150 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக அஜித்துக்கு அட்வான்சாக லைக்கா தரப்பிலிருந்து 20 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏகே 62 படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சம்பளம் வெறும் 50 லட்சம் மட்டும்தானாம். அதுவும் லைக்கா நிறுவனம் பழைய பாக்கி கழித்துக் கொள்ள சொல்லி விட்டார்களாம். ஏனென்றால் ஏற்கனவே லைகா நிறுவனமும், விக்னேஷ் சிவனும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் எடுத்து வந்தனர்.

அப்படத்திற்கு அட்வான்சாக விக்னேஷ் சிவன் 50 லட்சம் வாங்கியிருக்கிறார். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்தப் படம் பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் அப்படத்திற்கு வாங்கிய பணத்தை ஏகே 62 படத்தின் மூலம் கழித்துள்ளது லைகா நிறுவனம்.

விக்னேஷ் சிவன் ஏற்கனவே தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் காத்துவாக்கு 2 காதல் படத்தை இயக்கியுள்ளார். இதில் போட்ட முதலை எப்படியாவது அஜித் படத்தில் சம்பாதித்து விடலாம் என விக்னேஷ் சிவன் நினைத்திருந்தார். ஆனால் லைகா நிறுவனம் ஒரு ரூபாய் கூட தராமல் பழைய பாக்கியை முடித்துக் கொண்டது.

இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த விக்னேஷ் சிவன் அஜித் படத்தை இயக்குவதே மகிழ்ச்சி என மனதைத் தேற்றிக்கொண்டு உள்ளார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் நயன்தாராவுக்கும் ஒரு தொகை கிடைக்க உள்ளதால் அதுவும் எப்படியும் ஒரு கணக்கு தான் என விக்னேஷ் சிவன் ஆறுதல் அடைந்துள்ளார்.