அஜித்துக்கு ஜோடியாகும் சூர்யா பட நடிகை.. இவங்க ராசி வினோத்துக்கு ஒர்க் அவுட் ஆகுமா.!

வலிமை படத்தை தொடர்ந்து அஜித், வினோத் கூட்டணியில் உருவாகயுள்ள படம் ஏகே 61. இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் போனி கபூர், வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்கயுள்ளார் என்ற தகவல் இணையத்தில் காட்டுத்தீயாக பரவியது. ஆனால் இதை முற்றிலுமாக படக்குழு மறுத்தது.

மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இளம் நடிகை ஒப்பந்தம் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். அதாவது ஏகே 61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் தான் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரகுல் ப்ரீத்தி சிங் தற்போது சிவகார்த்திகேயன் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பிசியாக உள்ள ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது ஏகே 61 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் ரகுல் ப்ரீத்தி சிங் நடித்திருந்தார்.

இதனால் வினோத் மீண்டும் தனது படத்தில் இவரை நடிக்க வைக்கிறார். மேலும் ஏகே 61 படம் திருட்டு சார்ந்த த்ரில்லர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. அஜித் பல வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் பிக் பாஸ் கவின் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் சுமார் இரண்டு மாதங்கள் நடக்கயுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பிற்கான வேலைகளில் மும்முரமாக நடைபெற்ற வருகிறது.