அஜித்துக்கு அம்மாவா நடிச்சுட்டேன், தளபதிக்கு எப்ப நடிக்கிறது.. வருத்தத்தில் பிரபல நடிகை.!

மணிரத்தினம் இயக்கத்தில் நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் இவருடன் நடித்த நடிகர் பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சரண்யா நடிகை மட்டுமல்லாது டைலரிங் சொல்லிக் கொடுக்கிறார்.

சமீபகாலமாக திரைப்படத்தில் அம்மா ரோல் என்றாலே சரண்யா பொன்வண்ணன் தான். அவர் அம்மாவாக நடிக்காத ஹீரோக்களை இல்லை என்று கூறலாம்.  கதாநாயகியாக இருந்த போது கூட நிறைய ரசிகர்கள் இல்லையாம், அம்மாவாக நடித்த போது தான் நிறைய ரசிகர்கள் உள்ளார்களாம்.

விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்த படம் தான் தென்மேற்கு பருவக்காற்று இத்திரைப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். ஜீவாவுடன் ராம், அஜித்துடன் கிரீடம், உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி கதிர்வேலனின் காதல், சேரனுடன் தவமாய் தவமிருந்து, தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

விஜய்யுடன் சிவகாசி மற்றும் குருவி படத்தில் நடித்துள்ளார்.  இவருக்கு ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் விஜய்க்கு அண்ணியாக நடித்து விட்டாராம். அம்மாவாக நடிக்க வேண்டும் என்று ஆசையாம்.

இந்த ஆசை விரைவில் நிறைவேற வேண்டும் என்று சரண்யா உடன் விருப்பமாகவும் ரசிகர்கள் விருப்பமாகவும் இருக்கிறது.