அஜித்திற்கு உதவிய கார்த்திக்.. நன்றி கடனை திருப்பி செய்த AK

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்னும் அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் அஜித். திரைத்துறையில் தன்னுடைய முயற்சியால் சிறிது சிறிதாக முன்னேறி அவர் இந்த இடத்தை பெற்றிருக்கிறார். இவர் ஆரம்ப காலத்தில் ஒரு தனி ஹீரோவாக இல்லாமல் மற்ற நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அப்படி அவர் நவரச நாயகன் கார்த்திக் உடன் இணைந்து நடித்த திரைப்படம் ஆனந்த பூங்காற்றே. இந்த படத்தில் அவருடன் இணைந்து மீனா, மாளவிகா, பானுப்பிரியா, வடிவேலு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இதில் கார்த்திக் ஒரு கெஸ்ட் ரோலில் சிறிது நேரம் வருவது போன்று நடித்து இருப்பார்.

ஆனால் அந்த கேரக்டர் படத்திற்கு மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்து இருக்கும். முதலில் அந்த கெஸ்ட் ரோலில் யாரை நடிக்க வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த இயக்குனருக்கு கடைசியில் நியாபகம் வந்தவர் தான் கார்த்திக்.

அந்த சமயத்தில் மற்ற நடிகர்கள் அஜித் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தால் அதில் தங்களுக்கு முக்கியத்துவம் இருக்காது என்று நினைத்து அதில் நடிக்காமல் பின்வாங்கினர். ஆனால் அப்படி எதுவும் யோசிக்காமல் நடிக்க கேட்டவுடன் உடனே கார்த்திக் ஒப்புக் கொண்டு நடித்து கொடுத்தார்.

அதற்கு சில காரணமும் இருக்கிறது அது என்னவென்றால் அஜித் நல்ல நடிகர், திறமையானவர், நல்ல வளர்ந்து பல சாதனைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் இந்த படத்திற்கு முன்பு ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.

விக்ரமன் இயக்கத்தில் கார்த்திக், ரோஜா, அஜித் நடிப்பில் வெளிவந்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படம் தான் அது. அந்தத் திரைப்படத்தில் கார்த்திக் ஹீரோவாக நடித்திருப்பார். அஜீத் ஒரு கெஸ்ட் ரோலில் சிறிது நேரம் வருவது போன்ற காட்சியில் நடித்திருப்பார்.

இந்த நட்பின் காரணமாகவும், அஜித் சினிமாவில் இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும் என்ற நோக்கிலும் தான் கார்த்திக் ஆனந்த பூங்காற்றே திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அவர்களின் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு வகையில் அந்த படத்தின் வெற்றிக்கு நடிகர் கார்த்திக்கும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார்.