அஜித்தின் 61வது படத்திற்கு களமிறங்கும் புதிய பிரபலம்.. வலிமைலேயே நீங்க பண்ணது போதும்

அஜித்தின் வலிமை திரைப்படத்தின் கதைக்களம் பல விமர்சனங்களை பெற்ற நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற மாஸான அஜித்துக்கு பிடித்தமான பைக் ஸ்டன்ட் காட்சிகள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு பெரும் அளவில் பேசப்பட்டது. இந்த பாராட்டிற்கு முழுக்க முழுக்க ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் கோரியோகிராஃபி தான் காரணம். இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே61 திரைப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயன் இடம்பெறுவார் என்ற நிலையில் தற்போது அவருக்கு பதிலாக வேறோரு ஸ்டன்ட் மாஸ்டர் இடம் பெற்றுள்ளார்.

வலிமை படத்தில் நடிகர் அஜித்திற்கு மட்டுமில்லாமல் கதாநாயகி ஹூமா குரேஷி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திகேயன் உள்ளிட்ட அனைவருக்கும் மாசான சண்டை காட்சிகளை கோரியகிராஃபி செய்திருப்பார் ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயன். மேலும் வலிமை படத்தில் ஓவர் சென்டிமென்ட் காட்சிகள் அமைந்ததால் இத்திரைப்படம் பல விமர்சனங்களுக்கு உள்ளானது.  இருந்தபோதிலும் திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் கோரியோகிராஃபி இந்த படத்தை வெற்றியின் பக்கம் இழுத்தது. இதனால் இயக்குனர் ஹெச்.வினோத்திற்கு பெரிதளவு எந்த ஒரு பாராட்டும் கிடைக்கவில்லை.

அதுமட்டுமில்லாமல் தல அஜித் ஒரு சில காட்சிகளை இப்படி தான் எடுக்க வேண்டும் எனக் திட்டவட்டமாக இயக்குனர் வினோத்திடம் கூறியதும் ஒருவகையில் வலிமை படத்தின் விமர்சனத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஏகே 61 திரைப்படத்தில் உங்கள் இஷ்டப்படியே செய்யுங்கள் என்று ஹெச்.வினோத்திடம் நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஹெச். வினோத் ஏகே 61 திரைப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் சண்டைக் காட்சிகளை எடுக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களிலும் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். தமிழில் வெளியான கோலிசோடா 2 நடிகர் விக்ரமின் ஸ்கெட்ச் மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும் உள்ளிட்ட திரைப்படங்களில் இவரின் சண்டைக் காட்சிகள் பெரும் அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயனின் சண்டை காட்சிகள் தல அஜித்தின் அடுத்த திரைப்படத்தில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இருந்தாலும் சுப்ரீம் சுந்தர் கோரியோகிராஃபியில் உருவாக இருக்கும் சண்டைக் காட்சிகளை பார்ப்பதற்கும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் வலிமை திரைப்படத்தின் அப்டேட்களை பல வருடங்களாக ரசிகர்கள் கேட்டு பலமுறை ஏமாற்றமடைந்து பின்னர் ரிலீசான நிலையில், ஹெச் வினோத் ஏகே 61 திரைப்படத்திற்கான அப்டேட்களை கூடிய விரைவில் கொடுக்க தீவிரமாக இப்படத்தின் பணிகளில் ஹெச் வினோத் இறங்கியுள்ளார்.