அஜித்தின் 2 வெற்றி படத்தை தவறவிட்ட பிரசாந்த்.. அப்பவே சூதானமா இருந்தா, இவர்தான் இப்போதைய தல

தற்போது விஜய், அஜித் டாப் நடிகர்கள் ஆக உள்ள நிலையில் இவர்களையே ஒரு காலகட்டத்தில் ஓரம்கட்டியவர் நடிகர் பிரஷாந்த். ஆரம்பத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த உச்சத்தில் இருந்தார். பல இயக்குனர்களும் பிரசாந்தின் கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர்.

அப்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உடைய முதல் படமான தீனா படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் பிரசாந்துக்கு சென்றுள்ளது. இப்படத்தின் கதையை பிரசாந்தின் தந்தை தியாகராஜனிடம் முருகதாஸ் சொல்லியுள்ளார். இந்தக் கதையும் அவருக்கு ரொம்பப் பிடித்துப் போனது.

ஆனால் அப்போது பிரசாந்த் பல படங்களில் கமிட்டாகி இருந்ததால் தீனா படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு அப்படத்தில் அஜித் நடித்திருந்தார். அஜித்தை ஆக்ஷன் ஹீரோவாக தீனா படம் மாற்றியது. இதற்கு அடுத்தபடியாக ராஜீவ் மேனன் இயக்கத்தில் 2000 ஆண்டு வெளியான திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

இப்படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் பிரசாந்த் நடிப்பதாக இருந்தது. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜீன்ஸ். இப்படத்தில் பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.

இந்நிலையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக தபுவும், மம்முட்டிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளார் என ராஜீவ்மேனன் சொல்லியுள்ளார். ஆனால் பிரசாந்தின் தந்தை, ஜீன்ஸ் படம் வெளியாகி பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் பிரசாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை போடுங்கள் என கேட்டுள்ளார். மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும் இயக்குனரிடம் இதே கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் ராஜீவ் மேனன் அதற்கு சம்மதிக்காததால் பிரசாந்த் படத்திலிருந்து விலகியுள்ளார்.