அஜித்திடம் ஒன் லைன் கதை சொன்ன வினோத்.. இதென்ன டபுள் மாஸா இருக்கு.. உடனே தேதியை கொடுத்த தல

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் தற்போது ரிலீசுக்காக காத்திருக்கிறது. இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து அஜித் ரசிகர் தற்போது இப்படத்தை திரையில் காண காத்திருக்கின்றனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தற்போது அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஏற்கனவே வினோத் இயக்கத்தில் அஜித் 2 படங்களில் நடித்துள்ளார். இந்த 2 படங்களுமே அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். தற்போது இவர்களது கூட்டணி மீண்டும் இணைய போனி கபூர் வெளியிட்ட தகவல் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

வினோத் அஜித்திடம் அடுத்த படத்திற்கான கதையின் ஒரு லைன் கூறியுள்ளார். அதனைக் கேட்ட அஜித்குமார் கண்டிப்பாக இப்படத்தில் நாம் இருவரும் இணைந்து பணியாற்றலாம் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த ஒரு லைன் என்னவாக இருக்கும், அஜித் எப்படி உடனே ஓகே சொன்னார் என்பதுதான் பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது.

ஆனால் கண்டிப்பாக நாட்டில் ஏற்கனவே நடந்து முடிஞ்ச பிரச்சனை பற்றிய கதைதான் என்பதையும் கூறி வருகின்றனர். அஜித் வினோத் இருவருமே சமூகத்தின் மீது சற்று அக்கறை உள்ளதால் மக்களுக்கான படமாகத்தான் இருக்குமாம்.

ஆனால் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் அஜித்திற்கும் வினோத்திற்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டு விட்டது. இதனால் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. அதுவும் வினோத்துனுடைய ஆர்வத்தை பார்த்துதான் அஜித் இப்படத்தில் நடிக்க சம்மதிப்பார் என கூறி வருகின்றனர். தற்போது இவர்கள் இருவரும் இணைய உள்ள தகவல் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.