அச்சு அசல் வடிவேல் பாலாஜியாக மாறிய அறந்தாங்கி நிஷா.. கண் கலங்கிய விஜய் டிவி மேடை

விஜய் டிவியின் நயன்தாரா என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்பவர் அறந்தாங்கி நிஷா. மற்றவர்கள் தன்னை எவ்வளவு கலாய்த்தாலும் அதை பெரிதுபடுத்தாத நிஷாவுக்கு ரசிகர் பட்டாளம் நிறைய உண்டு.

பிக்பாஸ் சீசன் 4 ல் கலந்து கொண்டு பல கலவையான விமர்சனங்களை பெற்ற நிஷா, தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். ஒரு நிகழ்ச்சிக்காக மறைந்த நடிகர் வடிவேலு பாலாஜி போல மேக்கப் போட்டுள்ளார் நிஷா.

இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. போட்டோவை பார்க்கும் பொழுது நிஷா அச்சு அசல் வடிவேலு பாலாஜி போலவே இருக்கிறார். இதைப் பார்க்கும் பலருக்கும் வடிவேல் பாலாஜியை நினைத்து கண் கலங்குவதை நிச்சயம் நாம் மறுக்க முடியாது.

இது குறித்து நிஷா கூறியதாவது, இந்த கெட்டப்பை செட்டுல பார்த்த ஒவ்வொருக்கும் ஒரு பக்கம் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மேலும் பாலாஜி அண்ணா நாங்க எல்லாரும் உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவோம், மக்களை சந்தோஷபடுத்துவது மட்டும் தான் நம்ம வேலை, அதை எப்பவும் செஞ்சுக்கிட்டே இருப்போம் உங்கள் நினைவுகளோடு என்று கூறியுள்ளார்.

இதைப் பார்க்கும் ரசிகர்களும் வடிவேல் பாலாஜி என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்று கருத்துக்களை பதிவிடுகின்றனர்.

ஜோக்கர் படத்திற்குப் பிறகு, ரம்யா பாண்டியனின் வாழ்க்கையே மாற்றிய அந்தப் புகைப்படம்!

2015-ல் வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன்பிறகு ஜோக்கர் திரைப்படத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்தார். இவர் ஜோக்கர் படத்தில் நடித்திருந்தாலும் அந்தப்படத்தில் ரம்யா பாண்டியன் ...