அக்கா கேரக்டர் ஓகே., ஆனா ஹீரோயின விட அதிக சம்பளம் வேணும்.. அடம்பிடிக்கும் நடிகை

சினிமாவ பொருத்தவரை எந்த ஒரு நடிகையும் நீண்ட ஆண்டுகள் நிலைத்து இருப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கிய காரணம் இரண்டு தான். ஒன்று அந்த நடிகைக்கு திருமணமாகிவிட்டால் அவர் மார்க்கெட் குறைந்து விடும். மற்றொன்று அந்த நடிகைக்கு அதிக வயதாகிவிட்டாலும் அவர் பீல்ட் அவுட் ஆகிவிடுவார். ஆனால் இது நடிகர்களுக்கு கிடையாது. அவர்கள் 80 வயது வரை கூட ஹீரோவாக நடிக்கலாம்.

சரி நாம் விஷயத்திற்கு வருவோம். ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வந்தவர் தான் அந்த நடிகை. சிரிப்புக்கு பெயர் போன அந்த நடிகை நல்ல மார்க்கெட் இருந்த சமயத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அதன் பிறகு குடும்பம் மற்றும் குழந்தையை கவனிப்பதில் கவனம் செலுத்தி வந்ததால், படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த நடிகை மீண்டும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் முன்னணி நடிகர் ஒருவருக்கு ஜோடியாக அந்த நடிகை நடித்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே நடிகை மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் ஏற்கனவே கூறியது போல் திருமணமாகி விட்டதால், நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இருப்பினும் சில இயக்குனர்கள் நடிகையை சந்தித்து கதை கூறியுள்ளார்கள். ஆனால் நீங்கள் அக்காவாக நடிக்க வேண்டும் என கூறி டிவிஸ்ட் வைத்து விட்டார்களாம். அப்படி இருந்தும் அக்கா கதாபாத்திரத்திற்கு ஒகே சொன்ன நடிகையும் ஒரு டிவிஸ்ட் வைத்துள்ளார்.

அதாவது, படத்தில் ஹீரோயினைவிட தனக்கு அதிக சம்பளம் வழங்கினால் நடிக்கிறேன் என கூறி விட்டாராம். இதை கேட்டு அதிர்ச்சியான இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அந்த நடிகையே வேண்டாமென தலைதெறிக்க ஓடி விட்டார்களாம். மார்க்கெட் இல்லைனாலும் சம்பளத்தை மட்டும் குறைக்க மாட்டேங்குறாங்களே.

நுரை இருக்கும் தைரியத்தில் இப்படி ஒரு குளியல் புகைப்படமா? பாத்டப்பில் ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது நோ என்ட்ரி, மாளிகை, பிசாசு 2, வட்டம் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. அதிலும் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ...